பேருவளையில், பாதுகாப்பற்ற கட்டுமான குழியொன்றில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் விழுந்து உயிரிழந்தார்.
இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக பயணித்துள்ள நிலையில், வேகக்கட்டுப்பாட்டை இழந்து ரயில் கடவைக்கு அருகிலுள்ள கட்டுமானத் தளத்தில் கம்பிகள் மீது விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதில், பேருவளை, மாகலகந்த பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய திருமணமாகாத நபர் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, மோட்டார் சைக்களில் ஓட்டுனர் குடிபோதையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படுகாயமடைந்த நபரை பேருவளை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார் என தெரியவருகின்றது.
மேலும், பேருவளை நகர சபையினால் சுமார் ஒரு மாத காலமாக வீதியில் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், வீதி நிர்மானம் குறித்து அந்த இடத்தில் எந்த அறிவிப்பு பலகையும் அமைக்கப்படவில்லை என்றும் அந்த இடம் இரவு நேரங்களில் மிகவும் ஆபத்தானது என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.


