
ஹம்பாந்தோட்டை நகரசபையின் தலைவர் எராஜ் பெர்ணான்டோ, தாக்குதல் சம்பவமொன்று தொடர்பில் பொலிஸாரால் இன்று(19) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு பம்பலப்பிட்டி பிரதேசத்தில் இருவர் மீது தாக்குதல்களை நடத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
[embedded content]
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய பம்பலப்பிட்டி பொலிஸார், சந்தேக நபரான எராஜ் பெர்ணான்டோவை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அவர், பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




