வட மாகாணத்தில் 20 முதல் 29 வயது வரையானவர்களுக்கான தடுப்பூசி போடும் பணிகள் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது.
இதற்காக, மாகாணங்களுக்கு 131,000 தடுப்பூசிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில், யாழ்ப்பாணத்திற்கு 80,000, வவுனியாவுக்கு 18,500, கிளிநொச்சிக்கு 15,000, முல்லைத்தீவுக்கு 13,000 மற்றும் மன்னார் மாவட்டத்துக்கு 4,500 தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளன.
இலங்கைக்கு நேற்று சுமார் 40 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் வந்து சேர்ந்த நிலையில் 20 முதல் 29 வயது பிரிவினருக்கான தடுப்பூசிப் பணிகள் துரிதமாக இடம்பெறும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.





