கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 05 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சைகளை தீர்மானிக்கப்பட்ட தினங்களில் நடைபெறும் என்றும் இதுவரையில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை எனவும் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் பிரணவதாசன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நவம்பரில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள பரீட்சைகள் தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பரீட்சைகளை நடத்துவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட திகதிகளில் இதுவரையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
மேலும், கல்விப் பொதுத் தராதர சாதாரண மாணவர்களுக்கான செயன்முறை பரீட்சைகளை நடத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றது.
எனினும், கல்வி அமைச்சு மட்டத்திலான தீர்மானத்தின் பின்னரே, இது குறித்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.





