
கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக த்ரிஷா வலம் வருக்கிறார்.
சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் த்ரிஷா. தொடர்ந்து, முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாகியுள்ளார்.
இவர் நடிப்பில் தற்போது ராங்கி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது. சமீபகாலமாக முன்னணி நட்சத்திரங்களின் சம்பளம் குறித்து தகவல்கள் இணையத்தில் பரவலாகி வருகிறது.
இந்நிலையில் நடிகை திரிஷாவின் சம்பளம் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஒரு படத்திற்கு ரு. 3 கோடி வரை வாங்கி வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

