யானை தாக்கி பெண் ஒருவர் மரணம்!

அம்பாறை மாவட்டம், பக்கிஎல்ல பொலிஸ் பிரிவில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழந்தார்.

வெல்லாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயது பெண்ணே இவ்வாறு உயிரிழந்தார்.

மேலும், இப் பெண்ணை உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சேனரத்புர வைத்தியசாலையின் பிரேத அறையில் பெண்ணின் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *