யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் புதிய கொரோனாக் கொத்தணி உருவாகியுள்ளதாக என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில், இன்று ஞாயிற்றுக்கிழமை 39 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், யாழ்.சிறைச்சாலையைச் சேர்ந்த 34 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி, கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களில் ஒருவர் 22 வயதுடைய பெண் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அவர்களிடம் இருந்து கடந்த 16 ஆம் திகதி பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்டுள்ளமை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், குறித்த நான்கு நாட்களுக்குள் ஏனையவர்களுக்கும் பரவல் ஏற்பட்டிருக்கும் அபாயம் காணப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.





