
ஜனாதிபதியின் ஆலோசனையின்பேரில், சுகாதார பரிந்துரைகளில் கீழ் தேசிய கொவிட் தடுப்பு செயலணி தற்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பல துறைகளின் கட்டுப்பாடுகளை நீக்குவதில் கவனம் செலுத்தியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற தேசிய கொவிட் தடுப்பு செயலணி பணிக்குழுவின் கூட்டத்தில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
வருவாய் ஈட்டும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களைத் திறத்தல், கட்டுமானத் தொழிலாளர்களைக் கொண்டுவருவதற்கான அனுமதி, கிராமப்புறங்களில் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களின் ஆரம்பிப்பது, மற்றும் முச்சக்கர வண்டிகளை இயக்குவதற்கான அனுமதி ஆகியவை இதில் அடங்கும்.
ஜனாதிபதி இதற்கு அனுமதி வழங்கினார் மேலும் பொலிஸ்துறை மற்றும் சுகாதார சேவைகளை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்றும் கூறினார்.
நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் அத்தியாவசிய உணவுப் பொருள்களை தினசரி வழங்கும் திட்டத்தை மேலும் வலுப்படுத்தும் பணி வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பகுதியிலும் உள்ள பிரச்சினைகள் குறித்து பொலிஸாரிடமிருந்து தினசரி அறிக்கை பெற்று அவற்றை சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களுக்கு அனுப்புமாறு பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தேவையற்ற நபர்கள் சாலைகளில் பயணம் செய்வதை நிறுத்துமாறு ஜனாதிபதி பொலிஸ்மா அதிபருக்கு தெரிவித்தார்.




