
நாட்டின் பல பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஐவர் காயமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணம், காத்தான்குடி, ஏறாவூர், பேருவளை, திஸ்ஸமகாராம, வாரியபொல, பதியத்தலாவ, காலி மற்றும் பட்டபொல ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்துகளில் 23 தொடக்கம் 57 வயதுக்கிடைப்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.




