
வட்டவளை, லொனாட் பாற்பண்ணைக்கு அருகில் இருக்கும் குளத்திலிருந்து இளைஞர்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை நீராட சென்றிருந்த இருவருமே இவ்வாறு இன்று (20) சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இருவரில் ஒருவர் சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் மற்றையவர் வட்டவளை லொனாட் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவ ம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் வட்டவளை பொலிஸார் கூறினர்.




