ஒரே வீட்டில் 4 பேர் கொலை; பொலிஸார் வெளியிட்ட முக்கிய தகவல்

இங்கிலாந்தில் டெர்பிஷைர் கவுன்டியில், கில்லாமார்ஷ் பகுதியில் Chandos Crescent-ல் உள்ள ஒரு வீட்டில் நான்கு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அப்பகுதியில் இருந்து, ஞாயிற்றுக்கிழமை காலை 7.25 மணியளவில் பொலிஸாருக்கு ஒரு அவசர அழைப்பு வந்தது. அதில், குறித்த வீட்டில் எதோ அசம்பாவிதம் நடப்பதாகவும், அந்த வீட்டில் உள்ளவர்களின் பாதுகாப்பு குறித்து கவலை அளிப்பதாக தகவல் கொடுக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிஸார் அந்த வீட்டிற்கு விரைந்து வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அங்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் படுகொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.

உடனடியாக அங்கு துணை மருத்துவர்கள் மற்றும் அவசர சேவைகள் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியே பெரும் பரபரப்பானது, மேலும் அந்த வீட்டை சுற்றி பல பொலிஸார் குவிக்கப்பட்டனர். அந்த பாதை சில மணிநேரங்கள் மூடப்பட்டது. பொலிஸ் மற்றும் துப்பறியும் அதிகாரிகள் அங்கு தீவிர விசாரணை நடத்தினர்.

இறந்தவர்கள் குறித்து பொலிஸார் எந்த தகவலை இதுவரை வெளியிடவில்லை. ஆனால், இந்த படுகொலைக்கு தொடர்புடைய ஒரு நபரை குற்றவாளி என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்து காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை மாலை தெரிவித்தனர்.

இந்த கொலைகள் தொடர்பாக வேறு யார் மீது சந்தேகம் இல்லை என கூறிய பொலிஸார், நடந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் காவல்துறையை உடனடியாக அணுகுமாறு கேட்டுக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *