சீனாவில் படகு கவிழ்ந்து 10 பேர் பலி; 5 பேரை காணவில்லை..

சீனாவின் தெற்கிலுள்ள குய்சோ (Guizhou) பகுதியின் ஸாங்கே (Zangke) ஆற்றில் அளவுக்கு அதிகமானோர் பயணம் செய்த படகு கவிழ்ந்தது.

அதில் பயணித்த 10 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேரை காணவில்லை. படகிலிருந்தவர்களில் பெரும்பாலோர் மாணவர்கள் என நம்பப்படுகிறது.

Xiling Shipping நிறுவனத்தின் அந்தப் படகில் அதிகபட்சம் 40 பேர் பயணம் செய்யலாம். ஆனால், அதில் 46 பேர் பயணித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

மீட்புப் பணியாளர்கள் 31 பேரைக் காப்பாற்றியுள்ளனர். அவர்களில் நால்வர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

ஸாங்கே நகரில் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. அதன்காரணமாக படகில் அதிகமானோர் ஏற்றப்பட்டிருந்ததாலும் படகு கவிழ்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *