திருமலையில் காட்டு யானை அட்டகாசத்தால் சேதம்

திருகோணமால – தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இக்பால் நகர் கிராமத்துக்குள் நேற்று (19) இரவு புகுந்த காட்டு யானை பல சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானை தென்னை, வாழை மரவெள்ளி , நிலக்கடலை முதலான பயிர்களை துவசம் செய்துள்ளது.

மேலும், பயிர்களைப் பாதுகாப்பதற்காக கட்டப்பட்ட பாதுகாப்பு வேலிகளையும் நாசப் படுத்தியுள்ளதாகக் கூறுகின்றார்.

சுமார் 30 குடும்பங்கள் வசிக்கும் இக்கிராமத்தில் காட்டு யானைகளின் தொல்லை ஒவ்வொரு நாளும் நடப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

இரவில் தூங்குவது பயமாக இருப்பதாகவும் சிறு குழந்தைகளை வைத்திருப்பது கஸ்டமாக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

காட்டுக்குச் சென்ற விறகு எடுப்பதும், இரவு நேரங்களில் தேவை கருதி வெளியில் செல்லவும் முடியாதுள்ள தாக வும் தெரிவிக்கின்றனர்.

இக்கிராமத்தில் யானை பாதுகாப்பு வேலி ஒன்றை அமைத்துத் தருமாறும் கேட்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *