தங்காலை, வீரகெட்டிய – கஜநாயக்ககம பகுதியில் 14 வயது சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 10.00 மணியளவில் குடும்பத் தகராறின் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி அந்தக் சிறுவன் பலத்த காயங்களுடன் வீரகெட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர், தங்காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதோடு சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


