டெல்டா பரவல் குறைவடைந்துள்ளது- சுகாதார பணிப்பாளர்

டெல்டா பரவல் குறைவடைந்துள்ளதுசுகாதார பணிப்பாளர்

கொவிட் தடுப்பூசி ஏற்றல் மற்றும் நீண்ட நாள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு ஆகியவற்றின் சாதகமான பெறுபேறுகள் வெளிவரத்தொடங்கியுள்ளன. டெல்டா பரவல் வெகுவாக கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் சுகாதார பணிப்பாளர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

வாய்ப்புக்கள் கொடுக்கின்றபோது மக்களின் செயற்பாடுகள் மோசமாக இருந்ததாகவும் தனது அதிருப்தியையும் வெளிப்படுத்தினார்.

டெல்டா பரவல் கட்டுப்பாடு குறித்தும் கொவிட் தடுப்பூசி ஏற்றல் குறித்தும் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,
நாட்டில் நீண்ட நாட்களின் பின்பு கொவிட் பரவல் கட்டுப்பாட்டு நிலைமை காணப்படுகின்றது. தரவுகளுக்கு அமைவாக கூறுவதாயின் கடந்த 51 நாட்களுக்கு பின்னர் நாளாந்த கொவிட் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்துக்கு குறைவாக பதிவாகியுள்ளது.

இறுதியாக ஜூலை மாதம் 28 ஆம் திகதி 1940 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். அதன் பின்னர் தொற்றாளர்கள் நாளாந்தம் அதிகரித்து காணப்பட்டதுடன் ஒரு நாள் நான்காயிரம் தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

அதே போல் 41 நாட்களின் பின்னர் 100 க்கு குறைவான கொவிட் மரண்ஙகளும் பதிவாகிறது. ஆகவே நீண்ட நாட்களின் பின்னர் கொவிட் கட்டுப்பாட்டு நிலைமை ஒன்று காணப்படுகின்றது. டெல்டா வைரஸின் அச்சுறுத்தல் தொடர்ந்தும் காணப்படுகின்றது மக்களின் செயற்பாடுகள் வழமைக்கு திரும்பினாலும் மக்கள் தொடர்ச்சியாக சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்ற வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *