தனக்கு தானே தீ மூட்டியதில் ஒருவர் உயிரிழப்பு!

அல்லைப்பிடி, முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தனக்குத் தானே தீ மூட்டியதில் உயிரிழந்துள்ளார்.

48 வயதுடைய சோமசுந்தரம் ரவிச்சந்திரம் எனும் 10 பிள்ளைகளின் தந்தையே அவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும், நேற்று முன்தினம் சனிக்கிழமை இந்நபர் மதுபோதையில் அவரது சகோதரன் வீட்டுக்கு சென்று, சகோதரனுடன் முரண்பட்டு அவரை தாக்கியுள்ளார்.

அதன்பின்னர், தனது வீட்டுக்கு வந்து உடலில் பெற்றோலை ஊற்றிவிட்டு, அதனை பற்ற வைக்க அடுப்புக்கு அருகில் சென்ற போதே அவரது உடலில் தீ பற்றிக்கொண்டது.

அதேவேளை, அடுப்படியில் சமைத்துக்கொண்டு இருந்த அவரது மனைவி மீதும் தீ பற்றிக்கொண்டது.

இவர்களில் அலறல் சத்தம் கேட்டு அயலவர்கள் கூடி தீயை அணைத்து, இருவரையும் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதித்தனர்.

எனினும், கணவன் சிகிச்சை பலனின்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். மனைவி தீக்காயங்களுடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

அதேவேளை, உயிரிழந்த குடும்பஸ்தவரின் தாக்குதலுக்கு இலக்கான அவரது சகோதரனும் காயங்களுடன் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *