மதுபானக் கடைகளைத் திறப்பதன் மூலம் அரசாங்கத்திற்கு நாளாந்தம் பில்லியன் கணக்கான ரூபாய் வருவாய் கிடைக்கும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அகிலா எல்லாவல தெரிவித்துள்ளார்.
“மதுக்கடைகளைத் திறக்க ஆணையரின் அனுமதி தேவை என்பது மட்டுமே எமக்கு தெரியும் ஆனால் அதன் மூலம் மதுக்கடைகளை திறப்பதன் மூலம் அரசுக்கு ஒரு நாளைக்கு 500 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். இந்த நேரத்தில் நாம் எல்லா வகையிலும் சிந்தித்து பார்க்க வேண்டும்.
இரத்தினபுரியில் நேற்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அகிலா எல்லாவல இதனை தெரிவித்தார்.