முறைகேடுகளை சுட்டிக்காட்டிய வாடிக்கையாளருக்கு நடந்த சம்பவம்

வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணையில் வாடிக்கையாளர் ஒருவருக்கு நீண்ட நாட்களாக வழங்கப்பட்டு வந்த பால் அங்கு இடம்பெற்ற முறைகேடுகளை சுட்டிக்காட்டியதற்காக திடீரென்று எவ்விதமான முன்னறிவித்தல்களும் இன்றி உடன் நிறுத்தப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது .

தற்போதைய கொவிட் தொற்று நிலைமைகள் காரணமாக பால் மாவிற்காக தட்டுப்பாடுகள் நிலவி வரும் இக்காலப்பகுதியில் சிறுவர்கள் , முதியவர்களின் தேவைகளுக்காக வாடிக்கையாளர் ஒருவரினால் குறித்த அரச விதை உற்பத்திப்பண்ணையில் பால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது .

எனினும், அண்மைய சில நாட்களாக எட்டு மணிக்கு வழங்கப்பட வேண்டிய பால் பத்து மணிக்கு வழங்கப்பட்டு வருகின்றமை குறித்து அங்கு கடமையிருந்த தனியார் பாதுகாப்பு ஊழியருக்கு தெரிவிக்கப்பட்டு நேரகாலத்தில் பால் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் இதனால் சிறுவர்கள் உட்பட முதியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியவில்லை . பயணத்தடை காலத்தில் வீண் அலைச்சல்களையும் தவிர்த்துக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வாடிக்கையாளரினால் கோரிக்கை விடுக்கப்பட்டு ஒரு சில மணி நேரத்தில் குறித்த வாடிக்கையாளரின் தொலைபேசிக்கு அழைப்பு ஏற்படுத்திய பண்ணையின் உதவி முகாமையாளரினால் உங்களுக்கு வழங்கப்பட்ட பால் நிறுத்தப்பட்டுவிட்டது . உங்களுக்கு பால் வழங்க முடியாது என்ற தகவல் வழங்கப்பட்டுள்ளது .

இவ்வாறு பால் பண்ணையில் இடம்பெற்ற சம்பவங்களை சுட்டிக்காட்டியதற்காக தான் பழிவாங்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் மயப்படுத்தப்பட்ட அரச விதை உற்பத்திப்பண்ணையால் தனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் உணவு பாதுகாப்பு கட்டளைச்சட்டத்தில் இதற்கு சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்பதையும் குறித்த வாடிக்கையாளரினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .

இவ்விடயம் குறித்து மாவட்ட விவசாயத்திணைக்கள பணிப்பாளரிடம் முறையிட்டபோதும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வாடிக்கையாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *