வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு Tab வழங்கி வைப்பு

யாழ்.கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தின், விடுதியில் தங்கியிருந்து கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட ஐந்து உயர்தர மாணவர்களுக்கு Tab மற்றும் அதற்குரிய மாத கட்டணவசதி என்பன stanly college சர்வதேச பழைய மாணவர் சங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பேரிடர் காரணமாக வீட்டிலிருந்து நிகழ்நிலைத் தொழில்நுட்பமூடாக (Zoom) தற்போது கற்றல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த உதவித் திட்டம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கோம்பாவில், உடையார்கட்டு, மாங்குளம், சிலாவத்தை, மூங்கிலாறு தெற்கு ஆகிய இடங்களைச் சேர்ந்த குறித்த மாணவர்களின் வீடுகளில் வைத்து பழைய மாணவர் சங்க நிர்வாக உறுப்பினர்களால் கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் நேற்று தலா 23,000 ரூபா பெறுமதியான Tab மற்றும் கட்டணவசதிகளடங்கிய சிம் அட்டை என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *