இலங்கையில் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியூயார்க் சென்றுள்ள நிலையில் அங்கு ஐ.நா. பொதுச் செயலாளரைச் சந்தித்தார்.
இதன்போதே, சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் வலியுறுத்தினார்.
அத்துடன், கொவிட்19 தொற்று நோய் நெருக்கடிகளைக் கையாள்வதில் இலங்கையுடன் தனது ஒற்றுமையை அவர் வெளிப்படுத்தினார்.
இலங்கையின் நல்லிணக்க செயற்பாடு உள்ளிட்ட, உள்நாட்டு பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி பொதுச்செயலாளருக்கு விளக்கினார்.