
பாராளுமன்ற அமர்வு இன்று ஆரம்பமாகியுள்ளது.
புதிய அமைச்சரவை நேற்று பதவியேற்றுள்ள நிலையில் , இன்று சபை அமர்வு நடைபெறுகிறது.
இந்த நிலையில் எதிர்க்கட்சியினர் தலையிலும், கையிலும் “Go Home Gota ” என எழுதப்பட்ட பட்டிகளை அணிந்தவாறு சபை அமர்வில் கலந்து கொண்டுள்ளனர்.
அதன்படி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி இன்றைய நாடாளுமன்ற அமர்வில் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
“Go Home Gota” வாசகங்கள் பொறிக்கப்பட்ட பட்டிகளை தலை மற்றும் கைகளில் அணிந்து இன்றைய அமர்வில் அவர்கள் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.