மூத்த உறுப்பினர்கள் ஓரங்கட்டப்பட்டனர்!!!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை நேற்று பதவியேற்றுள்ள நிலையில், மூத்த உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படவில்லை.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மஹிந்தானந்த அளுத்கமகே, ரோஹித்த அபேகுணவர்தன, ஜனக பண்டார தென்னகோன், பந்துல குணவர்தன, காமினி லொக்குகே, எஸ்.எம்.சந்திரசேன, சீ.பி.ரத்நாயக்க, பவித்ரா வன்னியாராச்சி, டளஸ் அழகப்பெரும, சரத் வீரசேகர, எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படவில்லை.

எஸ்.பி.திஸாநாயக்க கைத்தொழில் அமைச்சராக பதவியேற்று சுமார் ஒரு மாத காலம் மாத்திரமே அந்த பதவியை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தினேஷ; குணவர்தன, ரமேஷ; பத்திரண, பிரசன்ன ரணதுங்க, திலும் அமுனுகம ஆகியோரை தவிர, கடந்த அமைச்சரவையில் இருந்த எவரும் புதிய அமைச்சரவையில் இடம்பெறவில்லை.

இராஜாங்க அமைச்சர்களாக செயற்பட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் 11 பேர் அமைச்சரவைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இந்த அமைச்சரவையில் பெண்களுக்கு இடமளிக்கப்படவில்லை. இராஜாங்க அமைச்சுப் பதவிகளே அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *