நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றையதினம் நாட்டின் பல பாகங்களிலும் எரிபொருள் விலை அதிகரிப்பை கண்டித்தும் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தற்போது ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் ஆர்ப்பாட்டம் காரணமாக கண்டி திகன – மஹியங்கன பிரதான வீதியுடனனான போக்குவரத்து முற்றாக முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


