புதிய அமைச்சரவையில் 10 பேர் முன்னாள் அமைச்சர்களின் இரத்த உறவினர்கள்! அம்பலமான உண்மை

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட 17 பேரைக் கொண்ட புதிய அமைச்சர்களில் 10 பேர் முன்னாள் அமைச்சர்களின் இரத்த உறவினர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அரசியல்வாதிகளின் புதல்வர்கள் அல்லது சகோதரர்களே அதிகளவில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அதனபடி,

தினேஷ் குணவர்தன (பிலிப் குணவர்தனவின் புதல்வர்),

ரமேஷ் பத்திரண (ரிச்சர்ட் பத்திரணவின் புதல்வர்),

பிரசண்ண ரணதுங்க (ரெஜி ரணதுங்கவின் புதல்வர்),

திலும் அமுனுகம (சரத் அமுனுகமவின் நெருங்கிய உறவினர்),

கனக ஹேரத் (மஹிபால ஹேரத்தின் புதல்வர்),

ஷெஹான் சேமசிங்க (எச்.பி.சேமசிங்கவின் புதல்வர்),

காஞ்சன விஜேசேகர (மஹிந்த விஜேசேகரவின் புதல்வர்),

விதுர விக்ரமநாயக்க (ரத்னசிறி விக்ரமநாயக்கவின் புதல்வர்),

பிரமித்த பண்டார தென்னக்கோன் (ஜனக பண்டார தென்னக்கோனின் புதல்வர்),

தெனுக விதானகமகே (அனுர விதானகமகவின் சகோதரர்) என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் முன்னாள் பிரபல அரசியல்வாதியான டி.ஏ.ராஜபக்சவின் புதல்வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *