
பாராளுமன்றம் சற் றுமுன் கூடிய நிலையில் பிரதமர் மகிந் ராஜபக்ச விசேட உரையாற்றினார்
அவரது உரையில்.
நாட்டு மக்கள் தற்போது பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதை ஒப்புக்கொள்வதாக தெரிவித்த அவர், அரசாங்கம் வேண்டுமென்றே தமது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாது என்றும் கூறினார்.
தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என்றும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
மேலும் பாரபட்சமின்றி நாட்டைக் கட்டியெழுப்ப வாருங்கள் என எதிர்க்கட்சிகளை ஓர் அரசாங்கம் என்ற ரீதியில் தாம் மனதார அழைப்பு விடுத்ததாகவும் அந்த அழைப்பு இன்றும் செல்லுபடியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் தற்போது காலி முகத்திடலில் உள்ள போராட்டக் குழுக்களை தன்னுடன் கலந்துரையாடலில் கலந்துகொள்ளுமாறு முன்னர் அழைத்திருந்ததோடு, அவர்களின் பெறுமதியான யோசனைகளை எடுத்துச் செல்ல முன்வந்தததை நினைவிற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
நீண்டகால மின்வெட்டுக்கான காரணங்களில் ஒன்று, சரியான நேரத்தில் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படாமல் இருந்தமையே என தெரிவித்த பிரதமர், தற்போது அந்தக் குற்றத்தை கடந்த காலத்திற்குக் கடத்துவது பயனற்றது என்றும் அதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.