
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று நள்ளிரவு நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள்களின் விலையை உயர்த்தியுள்ளது. அதற்கமைவாக பெற்றோல் ஒக்ரேன் 92 ரூ.338 ,
ஒக்ரேன் 95 ரூ 373, ஓட்டோ டீசல் ரூ 289, சுப்பர் டீசல் ரூ.329 என்று அறிவித்துள்ளது.
கடந்த மாதம் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் பெற்றுால் ஒக்ரேன் 92 இன் விலை 77 ரூபாவால் அதிகரித்து ரூ.254 ஆகவும், ஒக்ரேன் 95 இன் விலை 76 ரூபாவால் அதிகரித்து ரூ.283 ஆகவும், ஓட்டோ டீசலின் விலை 95 ரூபா அதிகரித்து ரூ.176 ஆகவும், சுப்பர் டீசலின் விலை 55 ரூபா அதிகரித்து ரூ.254 ஆகவும் இருந்தது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் ஒக்ரேன் 92 இன் விலை 84 ரூபாவால் அதிகரித்து ரூ.338 ஆகவும், ஒக்ரேன் 95 இன் விலை 90 ரூபாவால் அதிகரித்து ரூ.373 ஆகவும், ஓட்டோ டீசலின் விலை 113 ரூபா அதிகரித்து ரூ.289 ஆகவும் சுப்பர் டீசலின் விலை 75 ரூபா அதிகரித்து ரூ.329 ஆகியுள்ளது.
இதேவேளை- லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் நேற்றுமுன்தினம் எரிபொருள் விலைகளை அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.