
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் பதவிவிலகி, புதிய அரசு உருவாக வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
19 ஆவது திருத்தம் மீண்டும் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட வேண்டும்.
நீங்கள் முடிவு காணும் வரையில் மக்களின் போராட்டம் ஓயாது.
உங்களின் புதிய அமைச்சர்களால் எந்தப் பயனும் இல்லை.
போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்கும் இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள்.
நீங்கள் பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை என்ற படியால்தான் நாம் 40 பேர் இன்று எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கின்றோம்.
நாம் நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஆதரவை வழங்குவோம்.மக்கள் மிகுந்த கோபத்துடன் உள்ளனர்.
அரச கட்சி உறுப்பினர்கள் தமக்கும் இந்தப் பிரச்சினைக்கும் தொடர்பில்லை என்ற எண்ணத்தில் நடந்துகொள்கிறார்கள்.
மக்களின் வேண்டுகோள் அரசு விலக வேண்டும்.அதற்கும் எமது ஆசிகள் என்றார்.