
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தால் நேற்று அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
அவருக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை அன்றைய தினம் வரை நீடிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தில் நேற்று முன்னிலையாகுமாறு அவருக்கு முன்னதாக அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை.