நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை முதல் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தற்போது மாத்தறை அக்குறச பகுதியில் பேரூந்தின் மேல் ஏறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை வீதியில் பல நூற்றுக்கணக்கானோர் ஒன்று திரண்டு வீதியில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் குறித்த பகுதியில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.
