பெற்றோல் மற்றும் டீசல் கையிருப்பில்! – வலுசக்தி அமைச்சர்

எதிர்வரும் சில நாட்களுக்கு தேவையான பெற்றோல் மற்றும் டீசல் கையிருப்பில் உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இன்று நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு படிப்படியாக தவிர்க்கப்பட்டு வருகின்றபோதும் எரிபொருள் போக்குவரத்தில் இன்னும் சிக்கல்கள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும் எதிர்வரும் 10 நாட்களுக்கு தேவையான பெற்றோலும் எதிர்வரும் 14 நாட்களுக்கு தேவையான டீசலும் கையிருப்பில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *