பொலிஸார் வேண்டுமென்றே துப்பாக்கிச் சூட்டை நடாத்தினர்! – காயப்பட்டவர் பகீர் வாக்குமூலம்

நாங்கள் எந்த அரசாங்கத்திற்கு எதிராகவோ போராட்டம் மேற்கொள்ளவில்லை. மக்கள் பிரச்சினைக்காகவே போராடினோம். இதற்கு முழு காரணம் பொலிஸ் அதிகாரிகள்தான் என ரம்புக்கனை துப்பாக்கிச் சூடு மற்றும் கலவரத்தில் காயப்பட்ட நபர் ஒருவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இச் சம்பவத்திற்கு முழு காரணம் பொலிஸ் அதிகாரிகள்தான். பொலிசாரால் கண்ணீர் புகை வீசாவிடின் இவ்வாறான பிரச்சனை ஏற்பட்டிருக்காது.

அனைத்து பாதிப்புகளிற்கும் அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டும். அதேபோல பொலிஸ் இதற்கு பதில் கூற வேண்டும்.

அந்நேரத்தில் தனிப்பட்ட ரீதியில் கிரி சுதாக்கு துப்பாக்கி சூடு ஏற்பட்டது. உண்மையில் அது தனிப்பட்ட முறையில் சுடப்பட்டதாகவே இருந்தது.

அந்த நேரத்தில் A.S.P.Dharmarathna மற்றும் ரம்புகன Crime O.I.C. Bandara அவர்களின் மூலமே வெடி சம்பவம் ஏற்பட்டது. அது ஒரு சந்தேகப்பட கூடிய விடயமாகவே இருந்தது.

நீதி கிடைக்க வேண்டும். அதே போல நாங்கள் எந்த அரசாங்கத்திற்கு எதிராகவோ போராட்டம் மேற்கொள்ளவில்லை. மக்கள் பிரச்சினைக்காகவே போராடினோம். இதற்கு முழு காரணம் பொலிஸ் அதிகாரிகள்தான்.- என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *