தொன் கணக்கில் பொய் சொல்லாதீர்கள்! – சஜித், சபாநாயகர் இடையியே கடும் சொற்போர்

ஜனாதிபதி பதவி விலகத் தயாரென அறிவித்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதன்படிசபாநாயகருக்கும் சஜித்திற்கும் இடையில் குறித்த விடயம் குறித்து கடுமையான சொற்போர் இடம்பெற்றுள்ளது.

அனைத்துக் கட்சித் தலைவர்களும் தன்னை பதவி விலகுமாறு கோரினால் அதற்குத் தயார் என சபாநாயகரிடம் ஜனாதிபதி அறிவித்துள்ளதாக இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சபாநாயர், “பதவி விலகத் தயாரென ஜனாதிபதி அறிவித்ததாக தெரிவிக்கப்படும் விடயத்தில் எவ்வித உண்மையும் இல்லை” என அறிவித்தார்.

இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,

“நீங்கள் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் வைத்து இந்த விடயத்தை தெரிவித்தீர்கள். நீங்கள் கூறிய விடயத்தை தான் நான் இங்கு வந்து தெரிவித்தேன். பொய்களையும், திரிபுப்படுத்தப்பட்ட விடயங்களையும் சொல்ல வேண்டிய தேவை எனக்கு இல்லை. தொன் கணக்கில் பொய் சொல்லாதீர்கள்” என சபாநாயகரை நோக்கி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *