கொரோனா தொற்று மற்றும் கொரோனா தொற்றினால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையில் சடுதியான சரிவு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று நோயாளர்கள் அதிகமாக காணப்பட்ட வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை கடந்த காலங்களை விட தற்போது மிகக் குறைவு எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
பயணத்தின் மீதான கட்டுப்பாடுகள், தடுப்பூசிகளின் பாவனை மற்றும் மக்களின் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவை நோயாளிகளின் எண்ணிக்கை குறைவதற்கு வழிவகுத்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் கொரோனா நோயாளர்கள் 600 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது 150 அளவிலான நோயாளர்கள் மட்டுமே உள்ளனர் என கொழும்பு தேசிய மருத்துவமனையின் துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் இலங்கைக்கு தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது என சீன தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும்,26 மில்லியன் சீன தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள சீனத் தூதுவர் தனது ட்விட்டர் கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.