பெண் ஒருவருக்கு ஒரே நாளில் இரு தடுப்பூசிகள்- தீவிர விசாரணையில் பொலிசார்!

தனை, ஒகஸ்டா தோட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, ஒரே நாளில் இரண்டு மொடர்னா கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டமையினால், அவர் சுகயீனமுற்ற நிலையில் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் கணவர் பேராதனை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், காவல்துறை உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு கங்கவட்டகோரள சுகாதார வைத்திய அதிகாரி காரியாலத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட இந்த கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகளில், ஒரே தாதியினால் இவ்வாறு தனது மனைவிக்கு இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாகவும், அதன்பின்னர் அவர் திடீர் சுகயீனமுற்றதையடுத்து வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் குறித்த பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சிகிச்சைகளின் பின்னர் தமது மனைவியை வீட்டுக்கு அழைத்துச்செல்லுமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்தோடு இவ்விடயம் தொடர்பில் தமக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய, மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பேராதனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply