கிளிநொச்சியில் குழந்தை பிரசவித்த இளம்பெண் உயிரிழப்பு!

கிளிநொச்சியில் குழந்தை பிரசவித்த நிலையில், 27 வயதான இளம் தாயார் ஒருவர் மரணமடைந்தார்.

தர்மபுரம், கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் தனது பிரசவத்திற்காக, யாழ்.போதனா மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு குழந்தையைப் பிரசவித்த நிலையில் தாயார் உயிரிழந்தார்.

அஜந்தன் துஷ்யந்தினி என்ற இளம் பெண்ணே நேற்று இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரது உடலம் யாழ்.போதான மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளமையுடன், குழந்தையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *