மாத்தறை மாவட்டம், அக்குரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, மல்துவ பிரதேசத்தில் இருவருக்கிடையில் ஏற்பட்ட முறுகலில் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அக்குரஸ்ஸ, மலிதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
மேலும் சடலம், பிரேத பரிசோதனைக்காக மாத்தறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தக் கொலையுடன் தொடர்புடைய நபர் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கையில் அக்குரஸ்ஸ பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.





