
யாழ்ப்பாணத்தில் வெவ்வேறு இடங்களில் ஹெரோய்ன் மீட்பு மூன்று பேர் கைது!
யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரை வீதியில், ஹெரோய்ன் போதைப்பொருள் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான இரு இளைஞளிடம் இருந்து தலா 40 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இரு இருவரும் 23 மற்றும் 27 வயதுடையவர்கள். இருவரையும் யாழ்ப்பாணம் நீதிவான் மன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் 40 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் நேற்றுக்காலை கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.