நாட்டில் இதுவரை 1,509 பேருக்குத் தொற்று!

நாட்டில் மேலும் 673 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதனடிப்படையில், இன்று இதுவரையில் 1,509 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 506,000 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 433,093 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 12,218 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *