
விரைவில் ஐந்தாம் அலை- தடுக்க ஆறு பரிந்துரைகள் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

கொவிட் தாக்கத்தின் நான்காம் அலை கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றது. எனினும் ஐந்தாம் அலை இன்னும் சில மாதங்களில் தாக்கக்ககூடும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
ஐந்தாவது அலையை கட்டுப்படுத்துவதற்கான ஆறு பரிந்துரைகளையும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்வைத்துள்ளன.
கொரோனாவின் முதலாவது இரண்டாவது மூன்றாவது அலைகளின்போது பாதிப்பு குறைவாக இருந்தது என்பதால் அலட்சிப்பபோக்காக இருந்ததே நான்காம் அலையில் பாதிப்பு அதிகமானதற்கு முக்கிய காரணம் என சுட்டிக்காட்டிய அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பின்வரும் ஆறு பரிந்துரைகளை கூறுகின்றனர்.
01.தேசிய ஆணைக்குழுவின் வழிகாட்டுதல்கள் ஒப்புதல்களின்படி நாட்டின் சனத்தொகையில் 70 வீதமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்துதல்.
02. தொற்று நோய்களுக்கான தேசிய ஆலோசனைக் குழுவின் ஒப்புதலுக்கு உட்பட்டு இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றவர்களுக்கு நவம்பர் தொடக்கத்தில் இருந்து மூன்றாவது பூஸ்ட்டர் டோசை செலுத்துவததை ஆரம்பித்தல்.
03.சுகாதார வழிகாட்டுதல்களின்படி புதிய வாழ்க்கை முறைக்கு மக்களை உள்வாங்குதல்.
04.தடுப்பூசி போடப்பட்ட போதிலும் வைரஸால் பாதிக்கப்பட்டு நேர்மறை அறிகுறியற்ற நபர்களை அடையாளம் காண இலவசமாக வழங்கக் கூடிய எளிமையான ஒரு கொரோனா பரிசோதனை முறையொன்றை அறிமுகம் செய்தல்
05.சமூகத்தில் பரவிவரும் கொரோனா கொத்தணிகளை அடையாளம் காண அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக எழுமாறாக மாதிரி பரிசோதனைகளை முன்னெடுத்தல்
06.விஞ்ஞான மற்றும் சீரான முறையில் மரபணு சோதனையை நடத்துவதன் மூலம் சாத்தியமான புதிய திரிபுகளை அடையாளம் கண்டு ஆரம்பத்தில் இருந்தே சமூகத்தில் பரவுவதை தடுக்கும் உத்திகளை செயற்படுத்தல்

