டெல்லியில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகின்ற நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க மத்திய அரசு வலியுறுத்தி வருகின்றது.

அந்தவகையில் டெல்லி பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு முகக்கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி டெல்லியில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு  500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்தியாவில் நேற்று ஒரேநாளில் ஆயிரத்து 913 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 33 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *