
டிக்கோயா – இன்ஜஸ்றி பகுதியில் தனிநபர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
காலிமுகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், ரம்புக்கனை சம்பவத்தில் உயிரிழந்த நபருக்கு நீதி கோரியும் குறித்த போராட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கோரியும் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

