ஐ.பி.எல். பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் டெல்லி அணி அபார வெற்றி!

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 32ஆவது லீக் போட்டியில், டெல்லி கெபிடல்ஸ் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

மும்பையில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், டெல்லி கெபிடல்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி கெபிடல்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜிட்டிஸ் சர்மா 32 ஓட்டங்களையும் மாயங் அகர்வால் 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

டெல்லி கெபிடல்ஸ் அணியின் பந்துவீச்சில், காலீல் அஹமட், லலித் யாதவ், அக்ஸர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் முஷ்டபிசுர் ரஹ்மான் 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 116 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய டெல்லி கெபிடல்ஸ் அணி, 10.3 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் டெல்லி கெபிடல்ஸ் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டேவிட் வோர்னர் 60 ஓட்டங்களையும் பிரித்வீ ஷா 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சில், ராகுல் சஹார் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 2 விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப் யாதவ் தெரிவுசெய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *