இலங்கை பிரஜை பிரியந்த குமார கொலை வழக்கில் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் 6பேருக்கு மரண தண்டனையும் 7பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கியது.
இந்நிலையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில்,
பிரியந்த குமாரவுக்கு நீதி வழங்கியமைக்கு நன்றி. அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கான குடிமக்களின் உரிமையை நிலைநாட்டும் அதே வேளையில், ரம்புக்கன சம்பவம் தொடர்பாக நியாயமான மற்றும் விரைவான விசாரணையை அதிகாரிகள் நடத்தி அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.


