ஆழுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் தற்போதைய எண்ணிக்கை 116 – பெரும்பான்மையை இழக்க வாய்ப்பு?

நாடாளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 116 ஆகக் குறைவடைந்துள்ளது.

அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதில்லை என அரசாங்கத்திற்கு ஆதரவளித்த மேலும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று அறிவித்தனர்.

அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், எம்.எஸ்.தௌஃபீக் மற்றும் இஷாக் ரஹ்மான் ஆகியோரே அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக பைசல் காசிம் நேற்று நாடாளுமன்றில் அறிவித்திருந்தார்.

இதன்படி, அரசாங்கத்திற்கு ஆதரவான உறுப்பினர்களின் எண்ணிக்கை 116 ஆகக் குறைவடைந்துள்ளது.

இந்த நிலையில், மேலும் நான்கு உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்காமல் ஒதுங்கியிருந்தால், அரசாங்கம் நாடாளுமன்றத்தில் 113 என்ற தனிப் பெரும்பான்மையைக்கூட இழக்க நேரிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *