பாராளுமன்ற அமர்வு இன்றையதினம் காலை மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் ஆரம்பமானது.
இந்நிலையில் இன்றைய அமர்வில் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் கறுத்த உடை அணிந்தவாறு அமர்வில் கலந்துகொண்டுள்ளனர்.
இதேவேளை சபை ஆரம்பத்தில் பிரதமர் மற்றும் பெரும்பாலான அரசதரப்பு உறுப்பினர்கள் சபையில் காணப்பட்டனர்.
ஆனால் தற்போது ஆளும் தரப்பின் பெரும்பாலான ஆசனங்கள் வெறுமையாகவே உள்ளதுடன் ஒரு சில உறுப்பினர்களே தற்போது சபை அமர்வில் பங்கெடுத்துள்ளனர்.



