
பாராளுமன்ற அமர்வு இன்றையதினம் காலை மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் ஆரம்பமானது.
இந்நிலையில் காலை முதல் ஆளும் மற்றும் எதிர்த் தரப்புக்கும் இடையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் எரிபொருள் அதிகரிப்பு தொடர்பில் கடும் வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றது.
இந்நிலையில் பெரும்பாலான அரச தரப்பு உறுப்பினர்கள் சபையில் இல்லாத நிலையிலும் அமர்வு நடைபெற்றது.
இந்நிலையில் சபாநாயகரால் மதிய நேர உணவுக்கு சபை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஆசனத்திலிருந்து எழுந்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசமதிய உணவு வேளையை எடுக்காது தொடர்ந்து சபை அமர்வை நடாத்துமாறு சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் மதிய உணவு இடைவேளையின்றி சபை அமர்வு தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

