திருமலையில் பிரதான வீதியினை மறித்து அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

திருகோணமலை – மொரவெவ பிரதேச மக்கள், பிரதான வீதியினை மறித்து மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

உழவு இயந்திரங்களை வீதியின் இடைநடுவில் நிறுத்தி மக்களை பயணம் செய்ய முடியாதவாறு வீதியை மறித்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இப் போராட்டமானது இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இப் போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் பங்குபற்றியுள்ளனர்.

எரிவாயு இல்லை, எரிபொருள் இல்லை, மருந்துபொருட்கள் இல்லை மக்களால் இந்த நாட்டில் வாழ முடியவில்லை. இந்த அரசாங்கம் வீட்டுக்கு செல்ல வேண்டும் என தெரிவித்து மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து

இப் போராட்டத்தில் மாற்றுத்திறனாளி மக்களும் இணைந்து கொண்டுள்ளதுடன் மூவின மக்களும் இணைந்து இப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இப் போராட்டத்தின் போது அரசாங்கத்திற்கு எதிராக பதாதைகளை ஏந்தியவாறும், அரசாங்கத்திற்கு எதிராக கோசங்களை எழுப்பியவாறும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி நிலை இன்று அரசியல் நெருக்கடியாக மாறி மக்கள் தற்போது அரசாங்கத்தை எதிர்த்து தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நாட்டில் முன்னெடுக்கப்படும் பொதுஜன போராட்டம் சர்வதேச நாடுகளையும் எமது நாட்டின் நிலை தொடர்பில் கவனத்தை ஈர்த்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *