
மத்துகம பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய சுரங்கப்பாதை இன்று (21) சிறு குழந்தையினால் திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது, மக்கள் நிதியுதவியுடன் கூடிய திட்டங்களை திறந்து வைப்பதற்கு எம்.பி., அமைச்சர்களை கொண்டு வர வேண்டிய அவசியமில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.
அங்கு கருத்து தெரிவித்த பிரதேசவாசி ஒருவர்,
“பிரமுகர்கள் இல்லை, உயரதிகாரிகள் இல்லை, விஐபிகள் இல்லை. ஒரு சிறு குழந்தையின் இதயம் எவ்வளவு தூய்மையானது? நமது நாட்டின் எதிர்காலத்தை சுத்தமான கைகளால் திறக்க அனுமதிக்க வேண்டாமா? என்றார்.

