நாட்டு மக்களின் மனவலியில் குளிர்காயும் ராஜபக்சக்கள்! நாட்டில் இன்று

நாட்டின் எரிபொருள் விலை அதிகரிப்புடன் அத்தியவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதித்துள்ளது.

இதனிடையே பொருட்களுக்கான தட்டுப்பாடும் அதற்காக பல மணி நேரங்கள் ஏன் பல நாட்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை மக்களை மேலும் மேலும் விரக்தியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையை, சாதகமாக்கி கொண்டு தமது பணப்பெட்டியை நிரப்பிக்கொள்ளும் அரசியல்வாதிகளும், வியாபாரிகளும் இந்த நாட்டுக்கு மற்றொரு சாபக்கேடாக காணப்படுகின்றனர்.

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு இன்று நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்பட்டன.

குறித்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கோரி இன்றுவரையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும், தற்போதைய ஆட்சியில் உள்ளவர்கள் மக்களின் துன்பங்கள், வறுமை, பட்டினி, என எதையும் பொருட்படுத்தாமல் சுகபோக வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றமை குறிப்பிட்டத்தக்கது.

வவுனியா

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களிற்கான இரங்கல் நிகழ்வு வவுனியா பெரிய பள்ளிவாசலில் இன்று (21) இடம்பெற்றது.

மாலை 6.30 மணிக்கு இடம்பெற்ற இந்நிகழ்வில் மதகுருமார்கள் உட்பட பலரும் கலந்து கொண்டதுடன், இரங்கல் உரைகளும் இடம்பெற்றிருந்தது.

திருகோணமலை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று இன்றுடன் மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன.

இதனை முன்னிட்டு திருகோணமலை – தியாகிகள் அரங்குங்கு முன்னாள் உள்ள கடற்கரையி. உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர் நீத்தவர்களை நினைவுகூர்ந்து நினைவஞ்சலி இன்று மாலை இடம்பெற்றது.

இதில் சர்வமதத் தலைவர்கள், இளைஞர்கள், நலன்விரும்பிகளும் கலந்து கொண்டனர்.

கல்முனை

2019 ஏப்ரல் 21 உயிர்ப்பு ஞாயிறு அன்று நடைபெற்ற குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் வகையிலான பிரார்த்தனையுடனான கவனயீர்ப்பு போராட்டம் கல்முனை மெதடிஸ்ட திருச்சபை வளாகத்தில் வியாழக்கிழமை(21) மாலை இடம்பெற்றது.

இப்பிரார்த்தனையுடனான கவனயீர்ப்பு போராட்டத்தில் குண்டுத்தாக்குதலில் அருட்சகோதரிகள் அருட்சகோதரர்கள் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நண்பர்கள் என கலந்து கொண்டிருந்தனர்.

இத்தாக்குதலில் இறந்தவர்களில் நினைவாகவும் உயிர்ப்பு ஞாயிறு அன்று நடைபெற்ற குண்டுத் தாக்குதல் தொடர்பிலும் இங்கு கருத்துரைகள் நிகழ்த்தப்பட்டது.

இதன் போது கல்முனை திரு இருதயநாதர் ஆலய பங்குத்தந்தை அருளானந்தன் தேவதாஸன் பெரிய கல்லாறு மெதடிஸ்ட திருச்சபையின் அருப்பணி எஸ்.டி வினோத் கல்முனை மெதடிஸ்ட திருச்சபையின் அருட்பணி சுஜிதர் சிவநாயகம் ஆகியோர் இங்கு கருத்துரைகளை வழங்கிய பின்னர் அமைதியாக இக்கவனயீர்ப்பு போராட்டம் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னார்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (21) மாலை 6 மணியளவில் மன்னாரில் இடம் பெற்றது.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன் போது குறித்த தற்கொலை குண்டு தாக்குதலின் போது உயிர் நீத்த மக்களை நினைவுகூரும் வகையில் உருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன் போது மத தலைவர்கள்,மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய மை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *