பாலின் விலையை மாத்திரம் அதிகரிக்காமல் இருப்பது ஏன்? அரசாங்கத்திடம் கேள்வி

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் தமது பாலிற்கான விலையை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள விலை ஏற்றங்களினால் நாட்டு மக்கள் அனைவரும் பாரிய நெருக்கடிகளை சந்தித்து வருகின்ற நிலையில், பாலின் விலையை மாத்திரம் அதிகரிக்காமல் இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்தியாவசிய பொருட்களின் விலையை நாளுக்கு நாள் விலை ஏற்றி பால் உற்பத்தியை மாத்திரம் நம்பி இருக்கும் எமக்கு வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல மிக சிரமமாக உள்ளது எனவும், எமது பாலுக்கான விலையை அதிகரித்து தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *